ஆரணியில் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

ஆரணியில் கிணற்றில் விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் சைதாப்பேட்டை பகுதியில் வசிப்பவர் நெசவுத் தொழிலாளி ஞானவேல். இவரது மகன்கள் பார்த்திபன்(12), கோகுல்(8). இவர்கள் இருவரும், தங்களது வீட்டின் அருகே நேற்று விளையாட சென்றுள்ளனர். அப்போது இயற்கை உபாதைக்கு சென்ற கோகுல், பின்னர் அப்பகுதியில் உள்ள தரைக்கிணறு அருகே சென்றபோது தவறி விழுந்துள்ளார்.

இதையறிந்த சக நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்தஆரணி தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் குதித்து சிறுவனை தேடினர். நான்கு மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து தீயணைப்புத் துறையினர் கூறும்போது, ‘கிணற்றில் சுமார் 15 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. மேலும், சேற்றில் சிறுவன் சிக்கி கொண்டதால் உயிரிழந்துள்ளார்’ என்றனர்.

இது குறித்து ஆரணி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்