தி.மலை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கைக்கு முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், தி.மலை, உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவல கம் தி.மலை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தி.மலை ஆகிய உதவி மையங்களில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக் கலாம். 8-ம் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வர வேண்டும். 2021-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்தவர்கள், தங்களது 9-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை கொண்டு வர வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago