‘திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு தயார்' :

By செய்திப்பிரிவு

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு, அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற கரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. கரோனா 2-வது அலையில் பாதிப்பு அதிகமாக இருந்ததால், ஏராளமானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதிப்பு குறைந்துள்ளதால் 100 பேர் வரை மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். 200-க்கும் மேற்பட்ட படுக்கைகள் காலியாகி உள்ளன.

முன்னேற்பாடுகள்

கரோனா 3-வது அலை, குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என உலக சுகாதார நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு, 100-க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் தயார்படுத்தப்பட்டுள்ளது. காலியாக உள்ள கரோனா வார்டு, தற்போது குழந்தைகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில், விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்