ஆனைகட்டி பழங்குடியினர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு :

By செய்திப்பிரிவு

கோவை ஆனைகட்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் (பழங்குடியினர்) நிர்வாகத்தினர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘கோவை மாவட்டம், ஆனைகட்டியில் உள்ள பழங்குடியினர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேருவதற்கு ஆன்லைனில் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பொருத்துநர், மின்சார பணியாளர், கம்மியர் மோட்டார் வாகனம், கம்பியாள் (Wiremam), பற்ற வைப்பவர் (Welder) உள்ளிட்ட தொழில் பிரிவுகளுக்கு பயிற்சியில் சேர, பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பழங்குடியின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

ஆனைகட்டி (பழங்குடியினர்) தொழிற்பயிற்சி நிலையத்தில், பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன், விலையில்லாத மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, பேருந்து பயண அட்டை, பாடப்புத்தகங்கள், காலணி மற்றும் மாதாந்திர உதவித்தொகை ரூ.750 உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்படும். மேலும், பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி, உதவித்தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். ஆனைகட்டியில் உள்ள பழங்குடியினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்துக்கு அனைத்து அசல் சான்றிதழ்களையும் உடன் எடுத்து வந்தால், இலவசமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 98433-45051 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

கூடலூர்

இதேபோல நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தோட்டத் தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக 93444-65110, 93856-22457 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வர் ஷாஜி எம்.ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்