தொழிலாளர்களுக்கு - 3-ம் கட்ட தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூன்றாம் கட்ட கரோனா தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வலியுறுத்தினார்.

மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன சங்கங்களுடன் இணைந்து, அனைத்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் மூன்றாம் கட்ட கரோனா தடுப்பூசி போடும் முகாம்நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை துணைஇயக்குநர் பழனி, மாவட்ட தொழில்மைய துணை இயக்குநர் வெங்கடேசன், பொது மேலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இரண்டு தடுப்பூசி முகாம்கள்

ஏற்கெனவே அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கடிதம் அனுப்பியிருந்தார். அதன்படி, இரண்டு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.

3-வது கட்ட தடுப்பூசி போடும்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். இதையடுத்து, தடுப்பூசி போடும் முகாம்கள் விரைவில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்