தமிழகக் கோயில்களில் தமிழ் வழியில் வழிபாடு நடத்த சட்டம் இயற்றக் கோரி - தெய்வத்தமிழ் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

தமிழகக் கோயில்களில் தமிழ் வழியில் வழிபாடு நடத்த சட்டம் இயற்றக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெய்வத்தமிழ் பேரவை சார்பில் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகக் கோயில்களில் தமிழ் வழியில் வழிபாடு நடத்த சட்டம் இயற்றக் கோரியும், ஈஷா மையத்தை அரசுடமை ஆக்கக் கோரியும் தெய்வத் தமிழ் பேரவை சார்பில் நேற்று தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு தெய்வத்தமிழ் பேரவையின் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் வே.சுப்பிர மணிய சிவா தலைமைவகித்தார். தமிழக இளைஞர் முன்னணியின் தமிழக துணை பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்க பொதுக்குழு உறுப்பினர் ஆ.குபேரன் ஆர்ப்பாட்டத்தை விளக்கி கண்டன உரையாற்றினார். நகர செயலாளர் இரா.எல்லாளன், நிவாகிகள் க.வேந்தன் சுரேஷ், அ.கலைச்செல்வன், சு.சுகன்ராஜ் மற்றும் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்திருந்த கிராமப்புற பூசாரிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

இதில் தமிழ்நாட்டு கோயில் களில் கருவறையில் வழிபாடு தமிழில் நடத்தப்பெற சட்டம் இயற்ற வேண்டும், தமிழக கோயில்களை ஆக்கிரமிக்கும் நோக்கில் சூழ்ச்சியுடன், சூழலியல் விதிகளுக்கு அப்பாற்பட்டு ஆன்மிக நெறிகளுக்கு புறம்பாக ஜக்கி வாசுதேவ் நடத்திவரும் ஈஷா யோகா மையத்தை தமிழக அரசு அரசுடைமையாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பப்பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரி - காரைக்கால் கோயில்களில் தமிழ்வழி கருவறை பூஜைக்கு சட்டம் இயற்ற வேண்டும்.

ஜக்கியின் ஈஷாவை அரசு டமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரியில் தெய்வத்தமிழ் பேரவை சார்பில் நேற்று முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராஜா திரையரங்கம் சந்திப்பு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு செயற்குழு உறுப்பினர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார்.

ஒருங்கிணைப்பாளர் விஜயகணபதி, புதுச்சேரி செயலாளர் வேல்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கைலாய வாத்தியம் சிவனடியார் சிவ.சுரேஷ், உலக தமிழ்கழகம் தமிழுலகன், தமிழர்களம் அழகர், நாம் தமிழர் கட்சி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஆன்மிகவாதிகள், பேரவை உறுப்பினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்