வடக்குத்து ஊராட்சியில் - ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் : தமிழ்நாடு அரசுக்கு சபா ராஜேந்திரன் எம்எல்ஏ கோரிக்கை

By செய்திப்பிரிவு

வடக்குத்து ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சபா ராஜேந்திரன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

நெய்வேலி சட்ட மன்ற தொகுதியில் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கை மனுவை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் நெய்வே லியில் எம்எல்ஏ சபாராஜேந்திரன் நேற்று அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பது:

நெய்வேலி தொகுதியில் வடக்குத்து ஊராட்சி நகர பகுதி குறுகிய காலத்தில் மிக பெரிய நகரமாக வளர்ச்சி அடைந்து உள்ளது. வடக்குத்து மற்றும் இந்திராநகர் ஊராட்சிகளில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

இப்பகுதி மக்களுக்கு விபத்து, மகப்பேறு, பருவகால நோய் ஏற்பட்டால் சிகிச்சைக்கு செல்வதற்கு 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வடலூர், 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருங்கூர், 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வெங்கடாம்பேட்டை ஆகிய இடங்களுக்கு தான் செல்ல வேண்டி உள்ளது. எனவே, வடக்குத்து ஊராட்சியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து கொடுத்து அப்பகுதி மக்களுக்கு உதவிட வேண்டும். மேலும் நெய்வேலி தொகுதியில் உள்ள மருங்கூர் வட்டார மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், காடாம்புலியூர், பேர்பெரியான்குப்பம், வெங் கடாம்பேட்டை மற்றும் புலியூர் ஆகிய ஊர்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளான பீரோ, கட்டில், கணினி, பிரிண்டர், மேசை, நாற்காலி, வாட்டர் ஹீட்டர், சக்கர நாற்காலி மற்றும் ஆய்வு கூடம் ஆகிய உள்கட் டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

பெருமாத்தூர் ஊராட்சி ஏ பிளாக் தாயகம் திரும்பியோர் குடியிருப்பு பகுதியில் உள்ள துணை சுகாதார நிலையத்தை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்