கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி யர் பி.என்.தர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி நடப்பு கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்பில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது. பெற்றோர்கள் பள்ளிக் கல்வித் துறையின் “rte.tnschools.gov.in” என்ற இணையதளம் வழியாக ஜூலை 5 முதல் ஆகஸ்டு 3 வரை மட்டுமே விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் பதிவேற்றம் செய்யலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 54 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மற்றும் 85 மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களை பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். நுழைவுநிலை வகுப்பான எல்.கே.ஜி சேர்க்கைக்கு மாணவர்களுக்கு ஜூலை 31 அன்று 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும், குழந்தையின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.வயதை நிரூபிப்பதற்கு (பிறப்புச் சான்று, மருத்துவமனை சான்று, அங்கன்வாடி பதிவேடு நகல்) ஏதேனும் ஒரு சான்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், ஆண்டு வருமானம் ரூ.2லட்சத்திற்கு கீழ் உள்ள அனைத்து பிரிவினரும் நலிவடைந்த பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்கலாம். அதற்கு பெற்றோ ரின் ஆண்டு வருமானச் சான்று சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், வாய்ப்பு மறுக் கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள பிற்படுத் தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம், மிகவும் பிற்படுத் தப்பட்டோர், சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் விண்ணப்பிக்க சாதிசான்று உரிய அலுவலர்களிடமி ருந்து பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு பிரிவினர்களான ஆதரவற் றவர், மாற்றுத்திறனாளி குழந்தை, மூன்றாம் பாலினத்தவர், எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களின் குழந்தை, துப்புரவுத் தொழிலாளிகளின் குழந்தை போன்றோர்களுக்கு உரிய அலுவலரால் வழங்கப் பட்ட சான்றினை பெற்று இணை யதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பெற்றோர்கள் இணையம் வழியாக எங்கிருந்து வேண்டு மானாலும் விண்ணப்பிக்கலாம்
எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago