அரசு ஐடிஐ-களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தரவரிசைப் பட்டியல் வரும் 31-ம் தேதி வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி அடுத்த மாதம் 2, 3-ம் தேதி நடைபெறும்.
2 ஆண்டு படிப்புகளான பொருத்துநர், மின்சார பணியாளர் பயிற்சிகளுக்கு 10-ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். கம்பியாள் பயிற்சிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓராண்டு பயிற்சியான மெக்கானிக் (டீசல்) பயிற்சிக்கு 10-ம் வகுப்பும், பற்றவைப்பாளர் பயிற்சிக்கு 8-ம் வகுப்பும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சியாளருக்கு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750, மடிக்கணினி, மிதிவண்டி, ஆண்டுக்கு 2 செட் சீருடை, ஒரு ஜோடி காலணி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், இலவச பஸ் பாஸ், சலுகை கட்டண ரயில் பாஸ் உள்ளிட்டவை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 04633 277962, 280933 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தென்காசி, வீரகேரளம்புதூர், கடையநல்லூர் அரசு ஐடிஐகளில் சேர்க்கை உதவி மையங்களையும் அணுகலாம் என தென்காசி அரசு ஐடிஐ முதல்வர் வெங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago