காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் சில தினங்களுக்கு முன்புதான் பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட்டது. நேற்று இப்பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. திடீரென்று பலத்த சத்தத்துடன் கோபுரத்தின் மீது இடி தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது தெற்கு கோபுரத்தில் உள்ள யாளி பொம்மை உடைந்து கீழே விழுந்தது.
இடிச்சத்ததால் கோயிலுக்குள் இருந்த பக்தர்கள் 4 பேர் மயங்கி விழுந்தனர். பொம்மை கீழே விழும்போது யாரும் அருகில் இல்லாததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ‘‘கோபுரத்தின் மீது இடிதாங்கி இருப்பதால் இடி விழுந்திருக்க வாய்ப்பில்லை" என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago