கரோனா தடுப்பூசி இல்லாததால் ராமநாதபுரம் மக்கள் ஏமாற்றம் :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி நேற்று இருப்பில் இல்லை. இதனால் பல மணி நேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரையில் 2.38 லட்சம் பேர் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். நேற்று காலை திருப்பாலைக்குடி மற்றும் பல ஊர்களைச் சேர்ந்த வெளிநாடுகளுக்குச் செல்வோர் உள்ளிட்ட பொதுமக்கள் 75-க்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.

அவர்கள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை காத்திருந்தும் தடுப்பூசி போடப்படவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் கேட்டதற்கு, தடுப்பூசி மருந்து இருப்பில் இல்லை என்று மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது: ராமநாதபுரத்தி லிருந்து வெளிநாடு செல்வோருக் கான தடுப்பூசி மையமாக அரசு மருத்துவமனையே உள்ளது. வெளிநாடு செல்வோர் திடீரென அதிகளவில் வருவதால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படுகிறது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து தடுப்பூசி வரவழைக்கப்பட்டு காத்திருப்போருக்கு செலுத்தப்படும் என்றனர். இதைத் தொடர்ந்து பிற்பகலில் தடுப்பூசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, பல மணி நேரம் காத்திருந்த பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்