மூத்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க 1.1.2001 அன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணைய வழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் 2 பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ www.tamilvalarchithurai.com இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செயல்படுப வருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.3500, மருத்து வப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் உதவி இயக்குநர், மாவட்ட தமிழ் வளர்ச்சி அலுவலகத்தில் வருகிற 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago