தஞ்சாவூரில் இன்று நெல் கொள்முதல் பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் பணியாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று (ஜூலை 3) முதுநிலை மண்டல மேலாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, அனைத்து கொள்முதல் பணியாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது: தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 3) காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.

கூட்டத்தில் துணை மேலாளர்கள், கொள்முதல் அலுவலர்கள், கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர்கள், தங்களிடம் உள்ள கொள்முதல் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட சிட்டா மற்றும் அடங்கல், கொள்முதல் ரசீது, இயக்க ரசீது, இருப்பு நிலவரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக வெளிமாவட்டங்களிலிருந்து கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக வியாபாரிகள் கொண்டு வரும் நெல்லை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்து வரும் நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூர் மண்டல முதுநிலை மேலாளர் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதால், கொள்முதல் பணியாளர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்