திருப்பூர் மாநகராட்சியில் 1500-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தூய்மை பணி யாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ரூ.510 தினசரி ஊதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யும் இபிஎப், இஎஸ்ஐ தொகைக்கு முறையான ஆவணங்களை பராமரிக்க வேண்டும்,
மாதந்தோறும் முறையாக ஊதியம் வழங்குவதுடன், குடும்பத்தினர் மிகுந்தசிரமப்படுவதால் மூன்று மாத நிலுவை ஊதியத்தையும் வழங்க வேண்டும், என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட ஊரக ளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம்(சிஐடியு) தலைமையில், திருப்பூர்மாநகராட்சி அலுவலகத்தின் முன்பு தூய்மைப் பணியாளர்கள் ஏராளமானோர் திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிஐடியு சங்க மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் தலைமை வகித்தார். இதன் தொடர்ச்சியாக, பேச்சுவார்த்தை நடத்த சிஐடியு நிர்வாகிகளை மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி அழைத்தார். பேச்சுவார்த்தையின் முடிவில், உடனடியாக இன்று (ஜூலை2) அனைத்து மண்டலங்களிலும் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதிய நிலுவையில் தலா ரூ.10 ஆயிரத்தை பட்டுவாடா செய்வதாகவும், பிடித்தம் செய்யும் தொகைக்கு ஆவணங்கள் பற்றி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும், ஆட்சியர் அறிவித்த சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் ஆணையர் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
உதகை
இரண்டு தினங்களுக்கு முன்பு இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டபோது 2 நாட்களுக்குள் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உதகை நகராட்சி ஆணையர் சரஸ்வதி உறுதியளித்தார். ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் உதகையிலுள்ளநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறிநேற்று காலை 8 மணி முதல் காத்திருப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். அறிவித்தனர்.இந்நிலையில், தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்பட்டது. நிலுவை ஊதியம் விரைவில் வழங்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, மதியம் வரை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிக்கு திரும்பினர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago