சிவகங்கை மாவட்டம் திருப்பத் தூர் அருகே ஊராட்சி மன்ற கூட் டத்தின் போது விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் அருகே திருவிடை யார்பட்டியைச் சேர்ந்தவர் பாபு (35). இவர் தனது வீட்டுக்கு ஊராட்சி அலுவலகத்தில் வீட்டுவரி ரசீது பெற்றார்.
அந்த வீட்டு வரி ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்து மின் இணைப்புக்காக திருப்பத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் ஊராட்சித் தலைவர் வீட்டு வரி ரசீது கொடுத்ததில் பிரச்சினை இருப்பதாகக் கூறி மின் இணைப்பு தரக்கூடாது என மின்வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் பாபுவால் வீட்டுக்கு மின் இணைப்பு பெற முடியவில்லை.
இந்நிலையில் நேற்று ஊராட்சி மன்றக் கூட்டம் நடந்து கொண் டிருந்தபோது, அங்கு பெட்ரோல் கேனுடன் வந்த பாபு தீக்குளிக்க முயன்றார். அங்கு வந்த போலீஸார் பாபுவை சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாபு கூறுகையில், ‘நான் வீடு கட்டிய இடத்துக்குரிய ஆவணங் கள் என்னிடம் உள்ளன. அதைக்காட்டிதான் ஊராட்சித் தலைவரிடம் வீட்டு வரி ரசீது பெற்றேன். ஆனால் அவர் முதலில் வரி ரசீது கொடுத்துவிட்டு உள்நோக்கத்துடன் ரசீதை ரத்து செய்ய முயற்சிக்கிறார். அதனால்தான் தீக்குளிக்க முயன்றேன்,’ என்றார்.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் கண்ணன் கூறுகையில், ‘வீட்டு வரி ரசீது கொடுத்த இடத் தில் பாபு சகோதரர் பிரச்சினை இருப்பதாக மனு கொடுத்துள்ளார். அதனால்தான் மின் இணைப்பு கொடுக்க வேண்டாம் என்று கூறினேன்,’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago