வேலூர் சரகத்தில் 6 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து டிஐஜி ஏ.ஜி.பாபு உத்தர விட்டுள்ளார்.
வேலூர் சரகத்தில் காத்திருப் போர் பட்டியலில் இருந்த இரண்டு காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலையங்கள் மற்றும் காவல் துறை சிறப்பு பிரிவில் இருந்த ஆய்வாளர்கள் என மொத்தம் 6 பேரை பணியிடமாற்றம் செய்து டிஐஜி ஏ.ஜி.பாபு நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக இருந்து காத்தி ருப்போர் பட்டியலில் இருந்த அசோகன், வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார். அங்கு, ஏற்கெனவே பணியாற்றி வந்த ஆய்வாளர் சந்திரகுமார், பொன்னை காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பொன்னை காவல் ஆய்வாள ராக இருந்த காண்டீபன், ஆற்காடு கிராமிய காவல் நிலையத் துக்கும் அங்கு ஏற்கெனவே பணியாற்றி வந்த ஆய்வாளர் பாலு, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆய்வாளர் ஹேமமாலினி, திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்துக்கும், வேலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த செந்தில்குமாரி, கே.வி.குப்பம் காவல் நிலைய ஆய்வாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago