கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள நீலகிரி தயார் : வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

By செய்திப்பிரிவு

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், உதகைநகர திமுக சார்பில் நகரச்செயலாளர் ஜார்ஜ் தலைமையில், ஜீப் ஓட்டுநர்கள், கரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் தன்னார்வலர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா உதகையில் நேற்று நடைபெற்றது.

திமுக நீலகிரி மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் மற்றும்தமிழக வனத்துறை அமைச்சர்ராமச்சந்திரன் ஆகியோர் கரோனா காலத்தில் சிறப்பாகபணியாற்றிய நபர்களுக்கு கலைஞர்விருது மற்றும் நிவாரணப் பொருட் களை வழங்கினர்.

பின்னர் வனத்துறை அமைச்சர்கா.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீத பழங்குடியின மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி, இந்தியாவிலேயே பழங்குடியின மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல்மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி மாவட்டம் பெற்றுள்ளது. இதற்காக, நீலகிரிமாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவுக்கு, தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருதை வழங்க உள்ளார். மூன்றாவது அலையில் இருந்து மக்களைகாப்பாற்ற நீலகிரி மாவட்டத்தில் போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதி, ஆக்சிஜன் வசதிபோன்றவை தயாராக உள்ளன. குழந்தை களுக்கு சிகிச்சையளிக்கும் வகை யில், உதகை சிறுவர் மன்றத்தில் குழந்தைகள் சிகிச்சை பெறும் 120 படுக்கை வசதி கொண்ட தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த யானைக்கு சிகிச்சை

நீலகிரி மாவட்டத்தில் மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதாக புகார்எழுந்த நிலையில், வனத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கைஎடுத்துள்ளனர். தெப்பக்காடு முகாமில், பாகன் தாக்கியதால் கண் பாதிப்படைந்த கும்கி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.உதகையில் நடந்த நிகழ்ச்சியில், கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் தன்னார்வலருக்கு விருது வழங்கி கவுரவித்த வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன். படம்:ஆர்.டி.சிவசங்கர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்