வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு குடும்பப் பின்னணி முக்கியமல்ல. தன்னம்பிக்கை, அர்ப்பணிப் புடன் கடினமாக உழைத்தால் எதையும் சாதிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்புப் பயிற்சி மையங் களில் பயின்று பின்னர் அரசு பள்ளியில் 10, பிளஸ்-2 முடித்து தற்போது உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் 2020-21-ம் ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார். அப்போது குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீண்டு, அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் 43 பேருக்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.2.58 லட்சத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீண்டு வந்துள்ளீர்கள். குடும்பப் பின்னணி முக்கியம் அல்ல. தங்களுக்கான குறிக்கோள்கள், கனவு, இலக்கு ஆகியவற்றை வகுத்துக்கொண்டு அதை நோக்கி தன்னம் பிக்கையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் முழுமையான ஈடுபாட்டுடனும் உழைத்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம். எங்கு, எப்படி இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
மேலும், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு களையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். முன்னதாக, போக்சோ சட்டம் மற்றும் குழந்தை தொழிலாளர் சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசுரத்தை மாவட்ட ஆட்சியர் ஜெ.மகேநாதரெட்டி வெளியிட்டார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, துணை ஆட்சியர் (பயிற்சி) ஷாலினி, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குநர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago