காரைக்குடி நகராட்சி தொடக்க பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து, சிவகங்கை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளது.
தமிழகத்தில் பல அரசு தொடக்கப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே படிக்கும் இக்கால கட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலேயே அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளியாக காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப் பள்ளி மாறியுள்ளது. சுதந்திரத்துக்கு முன்பு 1939-ம் ஆண்டு இப்பள்ளி தொடங்கப்பட்டது. இங்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முயற்சியால் தனியாருக்கு நிகராக இப்பள்ளி மாறியது. இதனால் மாணவர்கள் சேர்க்கை 2014-ம் ஆண்டு முதல் படிப்படியாக உயரத் தொடங்கியது. கடந்த ஆண்டு இப்பள்ளியில் 730 மாணவர்கள் படித்தனர். இந்த கல்வியாண்டில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர் எண்ணிக்கை 1,040-ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து தலைமை ஆசிரியர் சாவித்திரி கூறியதாவது:
நான் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது, மாணவர் கள் எண்ணிக்கை குறைந்ததால் ஆசிரியர்கள் பலர் உபரியாக இருந் தனர். தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 5 மடங்காக உயர்ந்துள்ளது. இதனால் 10 ஆசிரியர்கள் கூடுதலாக தேவைப்படுகின்றனர். மேலும் கூடுதலாக 10 வகுப்பறைகள் தேவைப்படுகின்றன.
இதுகுறித்து வட்டார கல்வி அலுவலரிடம் தெரிவித்தோம். அவரும் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கவும், வகுப்பறைகளை கட்டித் தரவும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago