திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்துக்குள் இனி பேருந்து கள் மட்டுமே வர வேண்டும் என்றும், இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்களுக்கு இனி அனுமதி கிடையாது. இதனை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
கரோனா ஊரடங்கு நேரத்தில் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் காய்கறி மார்க்கெட் இயங்கி வந்தது. அதன் பிறகு அங்கிருந்து அகற்றப்பட்ட காய்கறி மார்க்கெட் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், கரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் கடந்த 28-ம் தேதி தொடங்கப் பட்டது. திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் தள்ளு வண்டிக்கடைகள், சாலையோர சிறு வியாபாரிகள், நடமாடும் வாகனங்களில் வியாபாரம் செய்வோர்கள் ஆக்கிரமித்து வியாபாரத்தை நடத்தி வந்தனர்.
தற்போது, பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால் திருப்பத் தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதி வருகிறது. கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் இருந்தாலும் விதிமுறைகள் காற்றில் பறப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
இதுகுறித்து வந்த தகவலின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சிபி சக்ரவர்த்தி, நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், சுகாதார ஆய்வாளர்கள் விவேக், குமார் மற்றும் காவல் துறை அதிகாரிகள் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து காவல் துறையி னர் கூறியதாவது, “கரோனா கட்டுப்பாடுகள் இன்னும் நடைமுறையில் உள்ளது. போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டாலும், பேருந்து நிலையத்தில் சமூக இடை வெளியில்லாமல் பயணிகள்,வியாபாரிகள் முண்டியடிக் கிறார்கள்.
இதைத்தடுக்க கடைகள் இயங்கும் இடங்கள் குறியீடு செய்யப்படவுள்ளது. அந்த இடத்தில் மட்டுமே அவர்கள் வியாபாரம் செய்ய வேண்டும். அதேபோல, பேருந்து நிலையத்துக் குள் இனி இரு சக்கர வாகனங்கள்,ஆட்டோக்கள், கார்கள் போன்றவை வந்துசெல்ல அனுமதியில்லை. மீறினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதை கண்காணிக்க தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago