கரோனா தடுப்பூசியின் முக்கியத் துவம் குறித்து கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமையில் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.
கரோனா தடுப்பூசி குறித்த ஆலோசனைக் கூட்டம் திரு வண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கிராம நிர்வாக அலு வலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “கரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசியே பேராயுதம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதன் முக்கியத்துவம் குறித்து கிராம மக்களிடம், கிராம நிர்வாக அலுவலர்கள் விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை கண்டறிந்து, அவர்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். தண்டராம்பட்டு வட்டத்தில் தினசரி ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இதில், வட்டாட்சியர் மலர் கொடி, சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் முருகன், துணை வட்டாட்சியர்கள் ஜான்பாஷா, கவுரி, சுமதி மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago