மரம் அறுக்கும் தொழிற்சாலைக்கு ‘சீல்' :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே அனுமதி யின்றி இயங்கி வந்த மரம் அறுக்கும் தொழிற்சாலைக்கு வனத்துறையினர் ‘சீல்' வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மரம் அறுக்கும் தொழிற்சாலைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலகத்துக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து, வனச்சரக அலுவலர் பிரபு தலைமையிலான வனத் துறையினர் திருப்பத்தூரில் ஆய்வு நடத்தினர்.

அப்போது, திருப்பத்தூர் அடுத்த டி-வீரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த வேலு(45) என்பவர் அனுமதியின்றி மரம் அறுக்கும் தொழிற்சாலையை அதே பகுதியில் நடத்தி வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மரம் அறுக்கும் தொழிற்சாலைக்கு வனத் துறையினர் ‘சீல்' வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்