தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், நகைக் கடைகளை திறக்க அரசுக்கு பரிந்துரை செய்யக் கோரி நகைக் கடை உரிமையாளர்கள் தஞ்சாவூர் எம்எல்ஏவிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாநகர நகைக் கடை வியாபாரிகள் நலச் சங்கத்தினர், அதன் தலைவர் எஸ்.வாசுதேவன் தலைமையில் நேற்று தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகத்தை சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில் தெரிவித்துள்ளது: தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நகைக் கடைகளை திறக்க அனுமதி வழங்கவில்லை. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள பணியாளர்களும், முதலீடு செய்தவர்களும் பெரும் சிரமத்தில் உள்ளனர். இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு சென்று நகைகளை வாங்கி வருகின்றனர். தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், இந்த மாவட்டத்தில் உள்ள நகைக் கடைகளை திறக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago