நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் - நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் சாலியமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் வே.ராஜாராமன் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அப்போது, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள் சரியாக கணக்கீடு செய்து பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்று ஆய்வு செய்து, அங்கிருந்த விவசாயிகள், சுமை தூக்கும் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் உள்ள நெல் மூட்டைகளை உடனடியாக சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்து, நெல் கொள்முதல் தங்குதடையின்றி நடைபெற வேண்டும் என கொள்முதல் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக, தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள், வேளாண் மைத் துறையி னருடன், நெல் கொள்முதலில் ஏற்படும் இடர்பாடுகள், மழைக் காலத்துக்கு முன்பு எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாய்வு நடத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்