கடலூரில் இடதுசாரிகள், விசிக சார்பில் - பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் :

கடலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள், விசிக சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உயிர்காக்கும் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க வேண்டும். அனைத்து குடும்பங்களுக்கும் மாதந்தோறும் ரூ.7,500 மற்றும் உணவுப் பொருட்கள் 6 மாத காலத்திற்கு வழங்க கோரியும், மத்திய தொகுப்பிலிருந்து நபருக்கு 10 கிலோ உணவு தானியங்கள் மற்றும் அவசிய உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கிட வேண்டும். தடுப்பூசி இலவசமாக செலுத்துவதற்கு தங்குதடையின்றி மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதை உறுதி செய்வதோடு, செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கு தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந் திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம்எல் ஆகிய கட்சியினர் கடலூர் ஜவான் பவன் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் அமர்நாத், விடுதலைச் சிறுத்தைகள் நகர செயலாளர் ராஜதுரை, இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், விடுதலைச் சிறுத்தைகள் கடலூர் நாடாளுமன்ற செயலாளர் தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு குளோப், மார்க்சிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினர் மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்