கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - பேருந்துகளில் குறைந்த அளவே மக்கள் பயணம் :

By செய்திப்பிரிவு

விழுப்புரம், கடலூர்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறைந்த எண்ணிக் கையில் அரசுப் பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன.

ஊரடங்கு தளர்வுகள் அடிப் படையி்ல் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. விழுப்புரம் மண்டலத்தில் 244 நகர பேருந்துகளில் 195-ம், 421 புறநகர் பேருந்துகளில் 227-ம் நேற்று முதல் இயக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் நேற்று இயக்கப்படவில்லை.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், வடலூர், பண்ருட்டி, திட்டக்குடி, விருத்தாசலம், காட்டுமன்னார்கோவில், நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று குறைந்த அளவு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று காலை குறைந்த அளவில் தான் பயணிகள் பயணம் செய்தனர்.

ஆனால் மதியத்துக்கு பிறகு பேருந்தில் 50 சதவீத பயணிகள் பயணம் செய்தனர். கடலூரில் இருந்து கோலியனூர் வழியாக சென்னைக்கும், திருவண் ணாமலை, வேலூருக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும் சேலம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படாததால் கடலூரில் இருந்து சேலம் செல்லும் பேருந்து கள் கள்ளக்குறிச்சி வரையிலும், கும்பகோணம் செல்லும் பேருந் துகள் ஜெயங்கொண்டம் வரையி லுமே இயக்கப்பட்டன.

விழுப்புரத்தில் இருந்து புறப்படும் பேருந்து சென்று சேரும் இடத்தை இரவு 10 மணிக்குசென்றடையும் வகையில் கால அட்டவணை வெளியிடப்பட் டுள்ளது. இதன்படி விழுப்புரத்திலி ருந்து காஞ்சிபுரம், திருச்சி, சென் னைக்கு மாலை 6. 30 மணிக்கும், வேலூருக்கு மாலை 6. 40 மணிக்கும், கள்ளக்குறிச்சிக்கு இரவு 8 மணிக்கும், திருக்கோவிலூர், புதுச்சேரிக்கு இரவு 8.35 மணிக்கும், திருவண்ணாமலை, கடலூருக்கு இரவு 8.30 மணிக்கும், செஞ்சி, உளுந்தூர்பேட்டைக்கு இரவு 9 மணிக்கும் கடைசி பேருந்து இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரத்தில் இருந்து இயக்கப்படும் கடைசி பேருந்து, மறுநாள் காலை 6 மணி முதல் சம்பந்தப்பட்ட ஊரிலிருந்து விழுப்புரத்திற்கு புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி

புதுச்சேரியில், கடந்த சில நாட்களாக அரசு, தனியார் பேருந் துகள் இயக்கப்பட்டாலும், பெரும்பான்மையாக உள்ள தனியார் பேருந் துகள் இன்னும் பல வழித்தடங்களில் இயக்கப்படவில்லை. தமிழக பேருந்துகள் இயங்காததால் புதுவை பேருந்து நிலையம் வெறிச்சோடி கிடக்கிறது.

தமிழகத்தில் மாவட் டங்களுக்குள் பேருந்துகளை இயக்க அனுமதியளித்துள்ளனர். மாநிலங்களுக்கு இடையில் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்க வில்லை.

இதனால் நேற்று முதல் தமிழக அரசுப் பேருந்துகள் புதுச்சேரி மாநில எல்லை வரை இயக்கப்பட்டது. நேற்று கோரிமேடு, கனகசெட்டிக்குளம், மதகடிப்பட்டு, கன்னியக்கோவில் ஆகிய பகுதி வரை தமிழக அரசுப் பேருந்துகள் வந்து சென்றன.

புதுச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் ஆட்டோ, டெம்போக்கள், இருசக்கர வாகனங்கள் மூலம் எல்லைக்கு சென்று அங்கிருந்து அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டனர்.

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், புதுச்சேரியைப் பொறுத்தவரையில் பேருந்துகள் முழுமையாக இயங்காததால் இயல்பு வாழ்க்கை முழுமையாக திரும்பவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்