குருங்குளம் சர்க்கரை ஆலை தரவேண்டிய - ரூ.18 கோடியை உடனே வழங்க வேண்டும் : கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத் தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தரவேண்டிய ரூ.18 கோடியை உடனே பெற்றுத்தர ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் துரை.பாஸ்கரன் உள்ளிட்ட விவசாயிகள், தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பது:

2020-21-ம் ஆண்டுக்கான கரும்பு அரைவை பருவம் கடந்த ஆண்டு டிச.27-ம் தேதி தொடங்கி 2021 ஏப்.30-ம் தேதியுடன் நிறை வடைந்தது. கரும்பு ஆலைக்கு வந்த 15 நாட்களில், கரும்புக்கு உரிய தொகை வழங்கப்படும் என்ற ஒப்பந்தம் உள்ளது. ஆனால், மார்ச், ஏப்ரல் ஆகிய 2 மாதங்களில் அரைவை செய்யப் பட்ட கரும்புக்கான தொகை ரூ.18 கோடி இதுநாள் வரை வழங்கப்படவில்லை.

அதேநேரத்தில், ஆலையில் இருந்து கடந்த ஆண்டு சேலத்தில் உள்ள நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்ட மொலாச ஸூக்கான தொகை ரூ.13 கோடியை அந்த நிறுவனம் இன்னும் வழங்காத நிலையில், ரசீதுகளின் அடிப்படையில் அந்தப் பணத்துக்கான ஜிஎஸ்டியாக ரூ.3 கோடியை அரசுக்கு ஆலை நிர்வாகம் செலுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு பெய்த கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, கரோனாவின் தாக்கத்தையும் கடந்து, பெரும் சிரமங்களுக்கு இடையில் வெட்டப்பட்ட கரும்புக்கு பணம் வழங்கப்படாததால், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் அரைவை பருவத்துக்கு நடவு செய்யவும், கரும்பு மறுதாம்பு செய்யவும் வங்கிகள் கடன் வழங்க மறுக் கின்றன.

அதேபோல, 2015-16, 2016-17-ம் ஆண்டுகளில் அரைத்த கரும்புக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகையான டன்னுக்கு ரூ.450 வீதம் இன்னும் பல விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது. அந்தத் தொகையையும் உடனே வழங்க வேண்டும்.

மேலும், ஆலை நிர்வாகத் திடமிருந்து விவசாயிகளின் கரும்புக்கான தொகையை மாவட்ட நிர்வாகம் பெற்றுத் தர வேண்டும். இல்லையெனில், விரைவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து கரும்பு விவசாயிகளையும் ஒன்றிணைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப் பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்