தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சி நிர்வாகத்தில் ரூ.3.26 கோடி அளவுக்கு முறைகேடு நிகழ்ந்துள்ளதாக, ஆட்சியர் அலுவலகத்தில் பத்து ரூபாய் இயக்கத்தினர் நேற்று புகார் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பத்து ரூபாய் இயக்கத்தின் மாநிலத் துணை பொதுச் செயலாளர் இரா.காந்தாராவ் ராசு தலைமையில் அ.ஜோசப் அமல்ராஜ், எஸ்.பி.சிவக்குமார், கோவிந்தராஜன் உள்ளிட்ட 25 பேர் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர் வாகத்தில் 2017-20-ம் ஆண்டு களில் நிதி முறைகேடு நிகழ்ந் துள்ளது. பேராவூரணி ஒன்றியத் துக்கு உட்பட்ட இடையாத்தி ஊராட்சியில் தனிநபர் கழிப் பறை கட்டும் திட்டத்தில் ரூ.10 லட்சம், செருவாவிடுதி வடக்கு ஊராட்சியில் சாலை அமைக்கும் திட்டத்தில் ரூ.28.34 லட்சம், பைங்கால் ஊராட்சி யில் சாலை அமைக்கும் திட்டத் தில் ரூ.14.98 லட்சம், ஒரத்த நாடு ஒன்றியத்திலுள்ள 58 ஊராட்சிகளில் வரிவசூல் நிதி ரூ.1.98 கோடி, ஆம்பலாபட்டு தெற்கு ஊராட்சியில் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.76.72 லட்சம் ஆகியவை உட்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 3.26 கோடி அளவுக்கு நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும், முறை கேடு தொடர்பான பட்டியலை ஆட்சியரிடம் வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago