பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி - கம்யூனிஸ்ட், விசிக பிரச்சார இயக்கம், ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க தவறிய மத்திய அரசைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல். லிபரேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சார்பில் பிரச்சார இயக்கம் நேற்று நடைபெற்றது.

தஞ்சாவூர் மாநகரில் பூக்காரத் தெரு முருகன் கோயில் அருகில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநகர பொரு ளாளர் மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்.கருணாநிதி, முன்னாள் கவுன்சிலர் முருகேசன், விசிக நிர்வாகி யோகராஜ் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.செந்தில் குமார், விசிக மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி ஆகியோர் பேசினா்.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

இதேபோல, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள மறவனூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு நிர்வாகி சீனிவாசன் தலைமை வகித்தார். துறையூரை அடுத்த உப்பிலியபுரம் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு, அன்பழகன், மருதை, ஆசை தினேஷ் ஆகி யோர் தலைமை வகித்தனர்.

அரியமங்கலம் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு ஜனநாயக சமூக நல கூட்டமைப் பின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், மகஇக மாவட்டச் செயலாளர் ஜீவா மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்பினர் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் எஸ்.கவி வர்மன், இந்திய கம்யூனிஸ்ட் மு.மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கறம்பக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ எம்.சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விராலிமலை, இச்சடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்