உதகையில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான பட்டய பாடப் பிரிவுகளில் மாணவா் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் ஜோ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2021-22-ம் கல்வி ஆண்டின் முதலாம் ஆண்டு சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேசன் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ரூமென்டேஷன் அண்டு கன்ட்ரோல் இன்ஜினியரிங், கமா்சியல் பிராக்டிஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.
பொதுப் பிரிவுகளுக்கு ரூ. 150விண்ணப்பக் கட்டணம். ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. இணையதளம் வாயிலாகவிண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 12-ம் தேதியாகும். நேரடி இரண்டாம் ஆண்டு, ஐடிஐ தோ்ச்சி பெற்ற மாணவா்கள் சோ்க்கைக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94428-44821 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago