கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு இலவச கல்வி : முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளை அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த மாணவ, மாணவியருக்கு கல்விக் கட்டணம் இன்றி பாலிடெக்னிக் மற்றும் கலை, அறிவியல் கல்லூரியில் இலவசமாக கல்வி கற்பிக்கப்படும், என முத்தாயம்மாள் அறக்கட்டளை தலைவர் ஆர்.பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ராசிபுரம் முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளை கல்விப் பணியில் 37 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இக்கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாலிடெக்னிக் கல்லூரி, மாநில அளவில் தொடர்ந்து 21 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகிறது. கடந்த அக்டோபர் 2020 வாரியத் தேர்வில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான வாரியத் தேர்வு முடிவுகளில் 109 மாணவ, மாணவியர் 700-க்கு 700 மதிப்பெண்ணும், 59 மாணவ, மாணவியர்கள் 700-க்கு 699 மதிப்பெண்ணும் மற்றும் 361 பேர் 698 முதல் 690 வரை பெற்றுள்ளனர்.

பெரியார் பல்கலைக் கழக அங்கீகாரத்துடன் இயங்கும் முத்தாயம்மாள் மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அக்டோபர் 2020-ல் நடந்த பருவத் தேர்வுகளில் 800 மாணவ, மாணவியர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தற்போது கரோனா பரவல் காரணமாக பெற்றோரை இழந்த மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 2021-2022-ம் கல்வியாண்டில் சேரும் 25 மாணவ, மாணவியர்களுக்கு 3 வருடத்திற்கான கல்விக் கட்டணம் முழுவதையும் முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளை நிர்வாகமே ஏற்கும். தற்போது கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்களுக்கும் இது பொருந்தும். மேலும் விவரங்களுக்கு 96777-70837, 97912-95137, 96777-70837, 97912-95137 96777-70837, 97912-95137 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்