சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அருகிலுள்ள கொத்தன்லு கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் காந்தி (21). இவர் பர்கூர் அருகே உள்ள ஜெகதேவியில் தங்கி வேலை தேடி வந்தார். இந் நிலையில் கிருஷ்ணகிரி-மத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கண்ணன்டஅள்ளி பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்றுபோது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்தார்.

இதில், பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக மத்தூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்