கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல்துறையினரின் அனு மதியின்றி பேனர் வைக்க அனுமதிக்கக்கூடாது என காவல் ஆய்வாளர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் உத்தரவிட்டுள்ளார்.
அரசியல் கட்சிக் கூட்டங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள், அரசியல் கட்சித்தலைவர் வருகை, திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது வழக்க மாகிவிட்டது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து பேனர் வைப்பது தொடர்பாக நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அரசியல் கட்சியினரும் பேனர் வைப்பதை குறைத்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பேனர் வைப்பது அதிகரித்திருக்கும் சூழலில், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் பேனர் வைப்பது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். மாவட்டத்தில் அனுமதியின்றியும், பொது இடங்களிலும் பேனர் வைப்பதற்கு அனுமதிக்க கூடாது.
மீறி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தர விட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago