தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன், தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் எம்.குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், “தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டபோது சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வன்னிக்கோனேந்தல் பிர்கா திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மானூர் ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால், இந்த பிர்கா சங்கரன் கோவில் சட்டப்பேரவைத் தொகுதி யிலும், தென்காசி மக்களவைத் தொகுதியிலும் உள்ளது. இதனை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்.
அதேபோல், பாப்பாக்குடி ஒன்றியத்தில் 11 ஊராட்சிகள், முக்கூடல் பேரூராட்சி பகுதிகள் ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளன. ஆனால் இந்த பகுதிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே, இந்த பகுதிகளை தென்காசி மாவட்டத்துடன் இணைக்க வேண்டும். கடந்த ஆட்சியில் ஊராட்சிகளில் வார்டுகள் பிரித்திருப்பதும், ஒன்றிய வார்டு வரையறை செய்திருப்பதிலும் குளறுபடிகள் உள்ளன. இவற்றை வருகிற உள்ளாட்சித் தேர்தலுக்குள் சரி செய்ய வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago