தமிழகத்தில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வேளாண் சார்ந்த தொழில்களுக்கு அரசு விலக்கு அளித்துள்ளது. மேலும், மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதிகளை வந்தடைந்துள்ளதால், திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சிவக்குமார் கூறியது: திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு 85 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயித்துள்ளபோதிலும், 97 ஆயிரம் ஏக்கர் வரை சாகுபடி நடைபெற வாய்ப்புள்ளது. கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் மன்னார்குடி பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நேரடி தெளிப்பு மூலமும், எஞ்சிய பரப்பளவில் நாற்றங்கால் அமைத்தும் சாகுபடி நடைபெறும்.
இவற்றுக்கு தேவையான அளவு உரம், விதை கையிருப்பில் உள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 54 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நேரடி தெளிப்பு மற்றும் நடவுப் பணிகள் நடைபெற்றுள்ளன என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago