கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் :

By செய்திப்பிரிவு

பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான அச்சத்தைப் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தஞ்சாவூர் நியூ டவுன் ரோட்டரி சங்கம், திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், பாரதி இயக்கம், காந்தி பாரதி இளைஞர் மன்றம் ஆகியவற்றின் சார்பில், கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சார பயணம் திருவையாறு பகுதியில் நேற்று நடைபெற்றது.

பிரச்சாரப் பயணத்தை திருவையாறு ரோட்டரி சங்கத் தலைவர் கை.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், பொதுசுகாதார மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சுகாதார ஆய்வாளர் டி.கார்த்திக்கேயன், திருவையாறு பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருவையாறு பேருந்து நிலையத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் புறப்பட்டுச் சென்ற 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், சடையாண்டி தோப்பு, காமராஜ் நகர், மேலவட்டம், அந்தணர்குறிச்சி, துப்புரவாளர்கள் காலனி, காந்திநகர், குண்டங்குடி, பருத்திக்குடி, கஸ்தூரிபாய் நகர், காருகுடி, அகிலாண்டபுரம் போன்ற பகுதிகளுக்குச் சென்று, வீடுவீடாக துண்டுப் பிரசுரங்களை வழங்கி, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்