மின்னணு நூல்களை வாசிக்க உதவும் கருவி - பார்வை திறன் குறைபாடு உடைய : மாற்றுத் திறனாளி விண்ணப்பிக்கலாம் :

By செய்திப்பிரிவு

மின்னணு வடிவில் உள்ள புத்தகங்கள் மற்றும் பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி பெறுவதற்கு, தகுதிகளுடைய பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வைத் திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளிகள் எளிதில் கற்பதற்கு ஏதுவாகமின்னணு வடிவில் உள்ள புத்தகங்களை (இ-புக்) பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி வழங்கும் திட்டத்தின்கீழ்,தகுதிகள் உள்ள மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பார்வைத் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இளநிலை கல்விமுடித்தவராக இருக்க வேண்டும்.முதுநிலை படிப்பு படிப்பவராகவோ அல்லது டெட், டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறுபவராக இருத்தல்வேண்டும். பிரெய்லி எழுத்துக்களை வாசிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஜூலை 5-ம் தேதிக்குள்..

மேற்கண்ட தகுதிகளை உடையபார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வரும் ஜூலை 5-ம் தேதிக்குள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்