முன்னறிவிப்பின்றி வழங்கியதால் - இலவச மளிகை பொருட்களை பெற ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் :

By செய்திப்பிரிவு

கரோனா நிவாரணமாக ரேஷன்கார் டுதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்களும், நிவாரண தொகையின் 2- வது தவணை ரூ.2,000-மும் கடந்த வாரம் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்கூட்டியே, ரேஷன் கார்டு தாரர்களுக்கு டோக்கன் விநியோ கிக்கப்பட்டது.

ஆனால், புதுக்கோட்டை மாவட் டத்தில் அன்றைய தினம் நிவாரண தொகை மட்டும் வழங்கப்பட்டதே தவிர, மளிகை பொருட்கள் வழங்கப்படவில்லை. ஆனால், இத்திட்டத்தை, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடங்கி வைத்த இடங்களில் மட்டும் தொகையுடன் சிலருக்கு மளிகை பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்நிலையில், முன்னறிவிப் பின்றி கடந்த 2 நாட்களாக மளிகை பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. டோக்கன் இல்லாமல் விநியோகிப்பதால் மளிகை பொருட்களை பெறுவதற்கு அதி காலையில் இருந்தே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர். ஒரே நேரத்தில் ஏராளமானோர் திரண்டதால் தனிமனித இடைவெளியின்றி நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை மண்டல இணைப்பதிவாளர் உமா மகேஸ்வரி கூறியபோது, ‘‘தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து அன்றாடம் ஒதுக்கீடு செய்யப்படும் மளிகைப் பொருட்களை பிரித்து அந்தந்த ரேஷன் கடைகள் மூலம் நுகர் வோருக்கு வழங்கப்படுகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்