தூய்மைப் பணியாளர்களுக்கு இரண்டு மாத ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி, திருப்பூர் மாநகராட்சி முன்பு உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு) நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தூய்மைப் பணியாளர்கள், வாகன ஓட்டுநர் உட்பட 1, 500-க்கும்மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
ஏப்ரல், மே மாதத்துக்கான ஊதியம் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. தொடர்ந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.510 ஊதியம் வழங்க வேண்டுமென ஆட்சியர் உத்தரவிட்டும் அமல்படுத்தப்படவில்லை. மேலும், அரசாணை 256-ன் படி தூய்மைப் பணியாளர்களுக்கு, மூன்று மாத ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேபோல, உடனடியாக 2 மாத கால நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், வரும் 28-ம் தேதிக்குள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படும் என, மாநகராட்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago