நீலகிரி மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், தோட்டதொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்களுக்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், பொதுமக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் கரோனாதடுப்பூசி செலுத்த நடவடிக்கைஎடுக்கப்பட்டது. உதகை, குன்னூர்,கூடலூர், பந்தலூர்,மஞ்சூர் ஆகிய 5 இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. உதகை அரசு மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக கரோனா தடுப்பூசி போட மக்கள் கூட்டம் அலைமோதியது.குறைந்த டோஸ்கள் ஒதுக்கப்பட்டு இருந்ததால் மருத்துவமனைக்கு வந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியவில்லை.
மக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் கூட்டமாக நின்றதால் தொற்று பரவும் அபாயம் இருந்தது. அங்கு கரோனா வார்டுகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால்தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து கரோனா பரவலை தடுக்க உதகை அரசு மருத்துவமனையில் செயல் பட்டுவந்த தடுப்பூசி செலுத்தும்மையம் உதகை அரசு மேல்நிலை பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று டோக்கன் பெற்று பின்பு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago