தனியார் பள்ளிகளில் - 25% இட ஒதுக்கீடு சேர்க்கை ஜூலை 5-ல் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி நடப்பு கல்வியாண்டில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்பில் 25 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளது.

பெற்றோர்கள் பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் 5.7.2021 முதல் 3.8.2021 வரை விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் பதிவேற்றம் செய்யலாம். 3.7.2021-ல் அனுமதிக்கப்பட்ட 25 சதவீத இடங்கள் பள்ளிக் கல்வி இணையதளத்தில் பள்ளி வாரியாக வெளியிடப்படும்.

ஆகஸ்ட் 10-ம் தேதி மாணவர்கள் சேர்க்கை இறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள், https://rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்