கிருஷ்ணகிரியில் பராமரிப்பு முடிந்து தயார் நிலையில் அரசுப்பேருந்துகள் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில், பேருந்துகள் பராமரிப்பு பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மே 10-ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால், தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3-ம் கட்ட தளர்வுகளில் 50 சதவீத பயணிகளுடன் பொது பேருந்து போக்குவரத்திற்கு அரசு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள் அனைத்து பராமரிப்பு பணிகளும் முடிந்து தயார் நிலையில் உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக போக்குவரத்து துறை அலுவலர்கள் கூறும்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, நகர், புறநகர், ஓசூர் நகர், புறநகர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய 6 போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளது.

கிருஷ்ணகிரி நகரில், 100 பேருந்துகளும், புறநகரில் 65 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. தற்போது பணிமனையில் நிறுத்தியிருக்கும் பேருந்துகள் அனைத்தும் பராமரிப்பு பணிகள் முடிந்து போக்குவரத்திற்கு தயார் நிலையில் உள்ளன. ஓட்டுநர், நடத்துநர்களுக்கு ஏற்கெனவே சிறப்பு முகாம் நடத்தப்பட்டு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்