திருச்சி சிறப்பு முகாமில் உள்ள - இலங்கைத் தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் : தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கைத் தமிழர்களில் ஒருவர் இறந்த தால், அங்குள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று தெரி வித்துள்ளது: இலங்கையிலிருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல், இந்தியாவுக்கு வந்த 78 பேர் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், தண்டனை காலம் முடிந்தும் சிறப்பு முகாம்களிலேயே வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்யக் கோரி கடந்த 17 நாட்களாக முகாமிலேயே இலங்கைத் தமிழர்கள் காத்திருப்புப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவர்களில் இலங்கை அக்கரைப்பட்டு கிராமத் தைச் சேர்ந்த முகமது அலி என்பவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் இறந்து விட்டார்.

மேலும், காத்திருப்புப் போராட் டம் நடத்தும் இலங்கைத் தமிழர்கள், தங்களை விடுதலை செய்ய வேண்டும், இல்லையெனில் கொன்றுவிட வேண்டும், இந்த இரண்டில் ஒன்றை தமிழ்நாடு அரசு செய்யவில்லையென்றால், தற்கொலை செய்து கொள்கிறோம் என்று கூறி போராடுகிறார்கள்.

எனவே, திருச்சி சிறப்பு முகாமில் உள்ள அனைத்து இலங்கைத் தமிழர்களையும் விடுதலை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்