தஞ்சை மாவட்டத்தில் ஜமாபந்தி தொடக்கம் : பூதலூர் வட்டாரத்தில் 69 பேருக்கு உதவித்தொகை பெற ஆணை

By செய்திப்பிரிவு

பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத் தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று ஜமாபந்தி தொடங்கியது.

1430-ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட் டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் நேற்று தொடங்கியது.

பூதலூர் வட்டாரத்துக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

முதல்நாளான நேற்று பூதலூர் வட்டத்துக்குட்பட்ட, தோகூர், பாதிரக்குடி, கோவிலடி, திருச்சென்னம்பூண்டி, மகாதேவ புரம், கச்சமங்கலம், மேகளத்தூர், அகரப்பேட்டை, ராஜகிரி, உஞ் ஞினி, ரெங்கநாதபுரம், நேமம், பழமார்நேரி, அலமேலுபுரம் ஆகிய வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கையை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்வதை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் பராமரிக்கும் கிராம கணக்கு பதிவேடுகளை ஆய்வு செய்தார். முன்னதாக, நில அளவையர் பயன்படுத்தும் அளவிடும் கருவி சரியாக உள்ளதா எனவும் ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் இருந்து மொத் தம் 89 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், 6 பேருக்கு வீட்டுமனை பட்டா, 69 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளை தகுதியின் அடிப்படையில் உடனடியாக வழங்கினார். தொடர்ந்து, வேளாண்மை துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இடுபொருட்களையும் தோட்டக்கலைத் துறை சார்பாக தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் 2 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய மரக்கன்றுகளையும் வழங்கினார்.

பின்னர், செங்கிப்பட்டி, புதுகரியப்பட்டியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ரமேஷ், ஆட்சியரின் நேர்முக மேலாளர் ரத்தினவேல், பூதலூர் வட்டாட்சியர் ராமச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்