தஞ்சாவூர் அருகே நாஞ்சிக் கோட்டை ஊராட்சியில் திறந்த வெளியில் கொட்டப்படும் மருத்துவக் கழிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாஞ்சிக்கோட்டை ஊராட்சி கல்யாணசுந்தரம் நகரில் புதர்கள் நிறைந்த பகுதியில் திறந்தவெளியில் கடந்த பல மாதங்களாக மருத்துவமனையில் நீரிழிவு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டியுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நேற்று துர்நாற்றம் வீசிய அந்த பகுதியை பார்த்த போது, அங்கு ஏராளமான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு கிடந்ததை அடுத்து, அதுகுறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, ஏராளமான மருத்துவக் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் மூலம் மருத்துவக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதுடன், இப்பகுதியில் மருத்துவ கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் விதமாக வருவாய்த் துறை, காவல் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago