செங்கம் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் :

By செய்திப்பிரிவு

செங்கம் அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தாழையூத்து கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு, சாத்தனூர் அணை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் குழாய்களில் உடைப்புகள் ஏற்பட்டுள்ளதால், குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், காலிக் குடங்களுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, “குடிநீருக்காக அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே எங்களுக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

பின்னர், சிறிது நேரத்தில் அவர்களாகவே கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்