ஏரிக்கரை உடைந்து வெளியேறிய தண்ணீரால் - சேதமடைந்த பயிர்கள் மதிப்பீடு : அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

By செய்திப்பிரிவு

காட்பாடி அருகே தனியார் பராமரிப்பில் இருந்த ஏரிக்கரை உடைந்து வெளியேறிய தண்ணீரால் சேதமடைந்த பயிர்களின் மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

காட்பாடி அடுத்த மாதண்ட குப்பம் கிராமத்தில் சுமார் 5.465 ஹெக்டேர் பரப்பளவில் தனியார் பராமரிப்பில் ஏரி உள்ளது. தாழ்வானப் பகுதி என்பதால் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழைநீர் தேங்கும் என்பதால் நிலத்தின் உரிமையாளர்கள் கரையை அமைத்து தண்ணீரை தேக்கி வைத்துள்ளனர்.

இதற்கிடையில், காட்பாடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் ஏரியில் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏரியின் ஒரு பகுதியில் இருந்த கரை பலமில்லாமல் இருந்துள்ளது. அந்தப் பகுதியில் திடீரென மண் அரிப்பு ஏற்பட்டு இரவு நேரத்தில் கரை உடைந்து தேங்கியிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேறியுள்ளது. திடீரென தண்ணீர் வெளியேறியதால், அருகே உள்ள விவசாய நிலங் களில் இருந்த பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், எரிக்கரை சேதமடைந்த பகுதியை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். மேலும், ஏரியில் இருந்து வெளியேறிய நீரால் சேதமடைந்த பயிர்கள் குறித்த விவரங்களை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்கவும் உரிய இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு வேளாண் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். மேலும், சேதமடைந்த ஏரிக்கரையை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், செயற் பொறியாளர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்