மகளிர் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர்களுக்கு விருது :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மகளிர் முன்னேற்றத் துக்காக பாடுபட்டவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசு எதிர்வரும் சுதந்திர தினத்தன்று மகளிர் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட நிறுவனம், பெண்களுக்கு சமூக சேவை புரிந்தவர்களுக்கான சிறப்பு விருது வழங்க உள்ளது.இவ்விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளிலும், பெண் குலத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கைகளிலும், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து, மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர், சமூக சேவை நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த சமூக சேவை நிறுவனம், அரசு அங்கீகாரம் பெற்றநிறுவனமாகவும் இருத்தல் வேண்டும்.எனவே, நீலகிரி மாவட்டத்தில் மகளிர் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட நிறுவனம், பெண்களுக்கு சமூக சேவை புரிந்தவர்களுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க நீலகிரி மாவட்ட சமூக நல அலுவலகத்தை ஜூன் 28-ம் தேதிக்குள் அணுக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்