திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் மற்றும் கோவையில் நடைபெற்ற வாகன சோதனையின் போது கர்நாடகாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 7862 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கர்நாடக மாநிலத்தில் இருந்து மாட்டுத் தீவனம் ஏற்றி வந்த வாகனத்தில் மது பாட்டில்களை கடத்தி வந்து, குன்னத்தூர் - செங்கப்பள்ளி சாலையில் விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, குன்னத்தூர் - செங்கப்பள்ளி சாலை பூலாங்குளம் பகுதியிலுள்ள சம்பத்குமார் என்பவருக்கு சொந்தமான வாடகை கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 6 ஆயிரத்து 912 மது பாட்டில்கள்விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மது பாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்யும் குன்னத்தூர் பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெய்சன் (38), கரூர் மனவாடி கந்தாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலசிங் (22), ஈரோடு மாவட்டம் கோபி, கெட்டிச்செவியூர் சாந்தி பாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (22) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 வேன், ஒரு கார், ரூ. 6.50 லட்சம் மதிப்பிலான 6,912 கர்நாடக மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago