முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

முடி திருத்தும் தொழிலாளர் களுக்கு கரோனா கால நிவாரணமாக ரூ.15 ஆயிரம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், திருப்பூர் ஆட்சியர் சு.வினீத்திடம் அளிக்கப்பட்ட மனுவில், "கடந்த ஆட்சியில் கரோனா தொற்று நேரத்தில், முடி திருத்தும்தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணம் ரூ.2 ஆயிரம்,அறிவிப்போடு நின்று விட்டது. கரோனா 2-வது அலையால், தற்போது முடி திருத்தும் நிலையங்களை மூடப்பட்டுள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உட்பட 11 மாவட்டங்களில் வாழும் முடிதிருத்தும் தொழிலாளர்களின் நிலை தொடர்பாக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.

கடை வாடகை, மின் கட்டணம், வீட்டு வாடகை, வங்கிக் கடன் பெற்று தொழில் செய்வோர் மிகுந்த வேதனையில் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக எந்தவித வேலையும் இன்றி வீட்டில் முடங்கியுள்ளோம். ஒவ்வொருஊரடங்கு தளர்வு அறிவிப்பிலும்கடை எப்போது திறக்கப்படும் எனஎதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம். அரசு அறிவித்துள்ள சுகாதார முறைப்படி, முடிதிருத்தும்நிலையங்களை நடத்த தயாராக உள்ளோம். விலைவாசி உயர்வைகருத்தில்கொண்டு, முடிதிருத்தும் தொழிலாளர்கள் அனைவருக்கும் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்